பள்ளிகளில் மாணவர் வருகை சரிவு

அரசு பஸ் ஊழியர்கள், கடந்த, ௪ முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த, சனி, ஞாயிற்று கிழமைகளில், பள்ளிகள் விடுமுறை என்பதால், பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்கள் உதவியுடன், அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

திங்கள்கிழமை பள்ளிகள் திறந்து, அரசு, தனியார் அலுவலக பணிகள் துவங்கிய நிலையில், பஸ் போக்குவரத்து இல்லாததால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும், பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்கள் உட்பட, அனைத்து இடங்களிலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும் மாணவ - மாணவியர் பஸ் வசதி இன்றி, வகுப்புகளுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக, வருகை பதிவு, 50 சதவீதம் குறைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பள்ளிகளுக்கு நீண்ட துாரத்தில் இருந்து, பஸ்சில் வரும் ஆசிரியர்களும், வகுப்புகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலர், பல மணி நேரம் தாமதமாக வருகின்றனர். மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலை மற்றும் மாலையில் நடக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகளிலும், மாணவர்கள்
பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.