ரூ.50 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனைக்கு மின்னணு ரசீது கட்டாயம் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மதுரை, 'ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த வியாபாரிகள்50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்பரிவர்த்தனை செய்யும்போது மின்னணுமுறையிலான ரசீது வழங்குவது கட்டாயம்,' என மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பதிலை பதிவு செய்த
உயர்நீதிமன்றமதுரைக் கிளை, அது தொடர்பான வழக்கை முடித்து வைத்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:இந்தியா முழுவதும் 2017 ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி.,வரி விதிப்பு அமலானது. இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறுசிரமங்கள் உள்ளன. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பது மக்களுக்கு சரியாக தெரியவில்லை. இதனால் பொருட்களைவிற்பனை செய்வோர் மக்களையும், அரசையும் ஏமாற்றலாம்.பொருட்களை வாங்குவோரிடம் வசூலித்த வரியை, சில வியாபாரிகள் அரசுக்கு செலுத்துவதில்லை. இதன் மூலம்ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியதன் நோக்கம் நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. மக்களிடம் வசூலிக்கும் வரி முறையாகமத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். 5000 ரூபாய்க்கு அதிகமான மதிப்பில் எந்தபொருள் வாங்கினாலும், ஆன்லைன் ரசீது வழங்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசுக்கும் வரி சரியான முறையில் சென்றடையும்.5000 ரூபாய்க்கு அதிகமான பொருட்களுக்கு ஆன்லைன் ரசீது வழங்க வேண்டும். எஸ்.எம்.எஸ்.,மூலம் ஆன்லைன் ரசீது பெறமற்றும் ரத்து செய்யும் வசதி செய்ய வேண்டும். அதற்கென தனித்த அடையாள குறியீட்டு எண் வழங்க வேண்டும். மாநிலம்,மாவட்டம், மண்டல அளவில் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன்.நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்திருந்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு விசாரித்தது.மத்திய அரசு பதில் மனு: ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த வியாபாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்பரிவர்த்தனைசெய்யும்போது மின்னணு முறையிலான ரசீது (இவே பில்) வழங்குவது கட்டாயம். பதிவு செய்த வியாபாரிகள் 50 ஆயிரத்திற்குகுறைவான பரிவர்த்தனைக்கு, அவர்கள் விரும்பும்பட்சத்தில் மின்னணு ரசீது வழங்கலாம். எஸ்.எம்.எஸ்., மற்றும்தனித்தஅடையாள குறியீட்டு எண் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., கமிஷனர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் கொண்ட குழுபொருட்கள் மற்றும் ஆவணங்களை எப்போதும் பரிசோதிக்கும் வகையில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு குறிப்பிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள்,'இதில் மேலும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கை முடித்து வைக்கிறோம்,'என்றனர்.