Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 14, 2017

பல்கலைகளில் முறைகேடு புகார்கள் : கவர்னர் தலையிட கோரிக்கை

தமிழக பல்கலைகளில், துணைவேந்தர் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான நியமனங்களில் குளறுபடிகள் குறித்து, புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து, தமிழக கவர்னர் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்
துறையில், ஏழு ஆண்டுகளாக, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. உயர்கல்வி செயலராக, சுனில் பாலிவால் பதவி ஏற்ற பின், ஓர் ஆண்டாக, பல குளறுபடிகள் தீர்க்கப்பட்டன. ஆனால், சில மாதங்களாக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மீண்டும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி, ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
முதல் தேடல் குழுவின் தேர்வு பட்டியலை, கவர்னர் நிராகரித்தார். இரண்டாவது தேடல் குழு, விண்ணப்பம் வாங்கியதுடன் முடிவுக்கு வந்தது. மூன்றாவது குழு, இன்று முதலாவது ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.சென்னை பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் பதவிக்கு, நீண்ட காலமாக யாரும் நியமிக்கப்
படவில்லை.மதுரை காமராஜர் பல்கலையின் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்ட விவகாரம், உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.இந்நிலையில், பாரதிதாசன் பல்கலையில், துணைவேந்தர் இன்றி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் பதவிக்கு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதற்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளனர்.பாரதிதாசன் பல்கலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில் இடம்பெற்றுள்ள, சிண்டிகேட் பிரதிநிதியின் நியமனத்திலும் சர்ச்சை எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வில், மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
சேலம் பெரியார் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைகளின் துணைவேந்தர் பதவிகளுக்கு, வரும், 20 முதல், நேர்காணல் நடக்க உள்ளது.இதிலாவது சர்ச்சை இல்லாமல், தேர்வு நடக்குமா என, கல்வியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்த அச்சத்தை போக்க, பல்கலைகளின் வேந்தரான, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் தலையிட்டு, உயர்கல்வித் துறையின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment