மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.கல்வியில் சிறந்த மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவி தொகைகளை பெற, மாநில அளவில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, தேசிய ஊரக மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு, மாவட்ட அளவிலான, 'மெரிட்' தேர்வு என, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இந்த தேர்வில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர். இதில், அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற, சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இது குறித்து, மாவட்ட அதிகாரிகள், அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும், இயக்குனர், கார்மேகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதம்:
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற, சிறப்பு பயிற்சி தரப்படும். இதற்காக, மாவட்ட வாரியாக மாணவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். பயிற்சியுடன், கையேடுகளும் வழங்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks