10, 11, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 10, 11, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டார்.

நடைபெறவிருக்கும் மார்ச் / ஏப்ரல் 2018, இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத்தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பே தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12ம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரையும், 11ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரையும், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
தேர்வுகள் வழக்கம் போல காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையைக் காண... இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!