ஜி.எஸ்.டி.,க்கு பிந்தைய பட்ஜெட் பிப்., 1ல் தாக்கல்?

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு வந்த பின், முதல் மத்திய பட்ஜெட், 2018, பிப்., 1ல் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பா.ஜ., அரசின் கடைசி முழு பட்ஜெட்டாகவும் இது இருக்கும்.


சேவை வரி

மத்திய பட்ஜெட்டை, பிப்., மாத இறுதியில் தாக்கல் செய்யும் வழக்கத்தை மாற்றியமைத்து, பிப்., 1ல் தாக்கல் செய்யும் நடைமுறை கடந்தாண்டு அமலுக்கு வந்தது மேலும், ரயில்வேக்கான தனி பட்ஜெட் நடைமுறை கைவிடப்பட்டு, அது, பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில்,ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வதிப்பு முறை, இந்தாண்டு ஜூலை, 1ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Budget,GST,Goods and Services Tax,ஜி.எஸ்.டி.,பட்ஜெட்
அதன்பிறகான முதல் பட்ஜெட், 2018 பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவரு மான, அருண் ஜெட்லி தாக்கல் செய்யும், ஐந்தாவது பட்ஜெட் இது. வரும், 2019ல், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், 2018ல் தாக்கல் செய்யப் படும் பட்ஜெட், தற்போதைய, பா.ஜ., அரசின் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும்.

ஆய்வறிக்கை:பட்ஜெட் கூட்டத் தொடர்,
2018 ஜன., 30ல் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.
ஜன., 31ல், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். முன்னதாக, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர், வரும், 15ல் துவங்கி, 2018, ஜன., 5 வரை நடக்க உள்ளது.