TN 7th PAY - New Pay Fixation Table - Complete Details Released - 31 Pages

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்வு. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20
லட்சமாக உயர்வு.7வது ஊதிய குழு பரிந்துரைகள் - 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு : மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதே போல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட 'அலுவலர் குழு' 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது. இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, இன்று (11.10.2017) எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். 
CLICK HERE TO DOWNLOAD