பல்கலை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி பல்கலை., பேராசிரியர்களுக்கான ஊதிய உயர்வு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி 392 மாநில பல்கலை மற்றும் 12,912 மத்திய பல்கலைகழகங்களின் உதவி பேராசிரியர்கள், இணை
பேராசிரியர்களுக்கு 22 சதவீதம் முதல் 28 சதவீதம்வரை ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனையடுத்து 7.51 லட்சம் பேராசிரியர்கள் பயன் பெறுவர் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.