வேலைக்கு உத்தரவாதம்; வருகிறது புது பாடத்திட்டம் - கல்வி அமைச்சர், செங்கோட்டையன்

''வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் இருக்கும்,'' என, கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை, வருங்கால மாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில், பாடங்கள் மாற்றி அமைக்கப்படும். எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் இருக்கும். 



தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பின், பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதால், நவம்பர், 15ம் தேதி அதற்கான முன் வரைவு வெளியிடப்பட்டு, 15 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டமும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கும் திட்டமும் அடுத்த மாதம் துவங்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks