அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரோடு : ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்கைது செய்யப்பட்டனர். 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார்
கைது செய்துள்ளனர்.



பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்பங்களிப்புஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின்அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டுநடவடிக்கை குழுவான ஜாக்டோஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7ஆம்தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்உயர்நீதிமன்றமதுரைக்கிளையின் தடையை மீறியும்அரசு எச்சரிக்கைக்கு சட்டை செய்யாமலும்இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து சாப்பிட்டும்பாய்தலையணையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களைபோலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்வர மறுத்த ஊழியர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்பல ஊழியர்களுக்குகாவல்துறையினரை கண்டித்து முழக்கமிட்டனர்
Tamil Nadu govt staff stage protest arrested
விழுப்புரத்தில் கைது விழுப்புரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தஅரசு ஊழியர்களும்ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். 300க்கும்மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்திருநெல்வேலியில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்வலுக்கட்டாயமாக கைதுசெய்யும் காவல்துறையினரைக் கண்டித்து ஊழியர்கள் முழக்கமிட்டனர்.