TNPSC - குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா?

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இத்தேர்வு ஆக., 6 ல் நடக்கிறது.
இதற்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான 'ஹால்டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு கண்காணிப்பு பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆக., 5 ல் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலம் நடக்கிறது.

 இதில் 70 சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.அவர்கள் ஆக., 6 காலையில் தான் ஊர்களுக்கு திரும்புவர். இதனால் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சிரமம். போராட்டத்தை காரணம் காட்டி சில ஆசிரியர் சங்கங்களும் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என, தெரிவித்துள்ளன. இதனால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வு நடத்துவது குறித்து டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசித்து வருகிறது. ஓரிரு நாட்களில் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றார்.