Few comparisons GPF / OPS Vs CPS :-

அவசியம் படிங்க. ஒன்றுக்கு நாலு முறை!
1. OPS :
வரையறுக்கப்பட்ட ஒய்வூதிய திட்டம் - Defined Benefit Scheme.
ஊழியருக்கு *எவ்வளவு, எப்படிக் கொடுக்க* வேண்டும் என்பதை விளக்கும்
திட்டம்.
CPS :
வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - Defined Contributory Pension Scheme.
அரசு ஊழியரிடமிருந்து *எவ்வளவு, எப்படி* பங்கேற்புத் தொகையை *பிடிக்க* வேண்டும் என்பதை மட்டும் விளக்கும் திட்டம்.
2. OPS :
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவதுபற்றி தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் - 1978 - ன் படி *ஓய்வூதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.*
CPS :
1.4.2003 முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தாலும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான *விதிமுறைகள் வகுகக்கபடவில்லை.*
3. OPS :
*30 ஆண்டுகள் பணிபுரிந்தால்* முமூ ஓய்வூதியம் கிடைக்கும்அதிகப்பட்சமாக கடைசி *ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக* பெறலாம்.
CPS :
*வரைமுறை செய்யப்படவில்லை.*
4. OPS :
i) *விருப்ப ஓய்வூதிய திட்டம்* உள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு Weightage உண்டு.
Voluntary retirement Pension Scheme.
An employee retiring, voluntarily, shall be given a weightage of service not exceeding 5 years, and total not exceeding 30 years.
ii) *இயலாமை ஓவ்வூதியம்* உண்டு.
Invalid Pension granted to an employee, who is by physical or mental infirmity, permanently incapacited for public service.
Employment of the dependent of medically invalidated employees is considered.
iii) *கட்டாய ஓய்வூதிய திட்டம்* உண்டு.
Compulsory Retirement Pension granted.
iv) *கருணை ஒய்வூதியம்* உண்டு.
Compassionate Allowance Pension granted.
v) *ஈடுகட்டும் ஓய்வூதியம்* உண்டு.
Compensation Pension granted.
CPS :
*இவை எதுவும் இல்லை. ஒரு வரைமுறை, உத்திரவாதம் கூட இல்லை.*
5. OPS :
i) குறைந்தபட்சம் *ஓராண்டுக்கும் குறைவான பணிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.* கடைசி ஊதியத்தில் 30% குடும்ப ஓய்வூதியம்.
ii) *ஏழாண்டுக்கு அதிகமான பணிக்கு* *கடைசி ஊதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாகக் கிடைக்கும்.*
CPS :
*குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லை.*
6. OPS :
*வருங்கால வைப்புநிதித் திட்டம்* உள்ளது.
வருங்கால வைப்பு நிதியில் *முன்பணம், கடன் பெறும் வசதி உண்டு.*
வருங்கால வைப்பு நிதியை *அசல் வட்டியுடன் உத்திரவாதத்துடன் திரும்ப பெற முடியும்.*
CPS :
*இல்லை.*
*வரைமுறையின் படி, திட்டம் - பங்குச்சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.*
7. OPS :
i) *மூன்று* வகையாக *பணிக்கொடை திட்டங்கள்* உண்டு.
Service Gratuity, Death Gratuity, Retirement Gratuity granted.
பணிக்கொடை வாயிலாக *2 முதல் 16 1/2 மாத ஊதியம்* வரை  கிடைக்கும்.
ii) ஓய்வூதிய தொகையில் *மூன்றில் ஒரு பங்கை 12 ஆண்டுத் தொகையை தொகுத்து பெறலாம்.*
Commutation.
CPS :
*இல்லை.*
8. OPS :
i) *குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்படுகிறது.*
ii) *80 வயதிற்க்கு மேல்* உயிருடன் உள்ளோருக்கு *கூடுதல் ஓய்வூதியம்*, *குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை கிடைக்கும்.*
iii) *மருத்துவ படி வழங்கபடுகிறது.*
CPS :
*இல்லை.*
9. OPS :
*விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி* உயரும் போதெல்லாம் *ஓய்வூதியம் உயரும்.*
*ஊதியக்குழுவின் பயனாக ஓய்வூதியம் உயரும்.*
CPS :
*இல்லை. அப்படியே இருக்கும்.*
10. OPS :
i) ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியத்தை தொகுத்கு பெறுதல், குடும்ப ஓய்வூதியம் இவற்றினை பெற *வரையறுக்கப்பட்ட உறுதியான கணக்கீடு மூலம் நிற்ணயிக்கப்படுகிறது.*
ii) *குறைந்தபட்ச உத்தரவாதம் உண்டு - தகுதி இருப்பின் முழூ அளவு கிடைக்கும்.*
(Pension, Graduity, Commutation)
iii) GPF கணக்குகளை *அரசின் தலைமைக் கணக்காயர் பராமரிப்பார்.*
*தனிக் கட்டணம் இல்லை.*
CPS :
i, ii) *குறைந்தபட்ச உத்தரவாதம் கூட செய்யப்படவில்லை.*
iii) CRA, POP, Trustee Bank, Pension Fund Managers - *பல்வேறு தலைப்புகளின் கீழ் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.*
*FRDA வால் நியமிக்கப்பட்ட PFM, CRA, NSDL போன்றவை கண்காணிக்கும்.*
11. OPS :
i) *ஓய்வூதிய தாரர்களின் குறையைத் தீர்க்க Pension Adalat செயல்படுகிறது.*
ii) *ஓய்வூதிய இயக்குனர்கம் செயல்படுகிறது.*
CPS :
*இல்லவே இல்லை.*
ஏன் பழைய ஓய்வூதிய திட்டம் கோருகிறோம்?
ஏன் CPS - எதிர்க்கிறோம்?
சற்றேறக்குறைய புரிந்திருக்கும்.
*அரசு துறையில் பணி  செய்த/செய்யும்உங்கள் குடும்பத்தினர், உறவினர் & நன்பர்களிடம் இதனைப் பற்றி கலந்து பேசுங்க.*
*அதிகம் பகிருங்க !*

_*எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?*_