CPS : ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவுக்கு புதிய தலைவர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற
..எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே அமலில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வு பெற்ற ..எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில், 2016 பிப்., 22ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
குழுவும், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, ஏழு நாட்கள் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. இந்நிலையில், மத்திய அரசானது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய, 2016 அக்., 21ல், ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து, வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்தது. ஆனால், குழுவின் தலைவராக இருந்த, சாந்தா ஷீலா நாயர், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, வல்லுனர் குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற, ..எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, தமிழக அரசு நியமித்துள்ளது. குழுவானது, ஓய்வூதியம் குறித்த அறிக்கையை, நவம்பர் இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது.