தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்  என்று
தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
 தொடக்க  கல்வித்துறையில் ஆசிரியர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் பணியில் காணப்பட்ட குறைபாடுகள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை  சேகரிக்கவேண்டும். தொகுப்பு அறிக்கை தயாரிக்கும்போது தமிழ்நாடு குடிமுறைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17, 17,  17, 17-யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்களும் பணியில் ஒழுங்கீனம் காரணமாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட  ஆசிரியர்களின் விவரங்களும் சேகரிக்க வேண்டும்.

எவ்வித விவரங்களும் விடுபடாமல், தனித்தனியாக மாவட்ட அளவில் தொகுத்து 2012-2013 முதல் 2016-2017ம் ஆண்டுகளின் விவரங்களை சேகரித்து  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த அறிக்கை எவ்வளவு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும், இதன்மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.