மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு

புதுதில்லி: அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருந்து கடை விற்பனையாளர்கள் வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம் என்றும்வ வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., வரியுடன் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி.,யில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும், இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.