தனியார் பள்ளிகளுக்கு மேலாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது
பாடமாக கொண்டுவர வேண்டும்.
Image may contain: 3 people, people sitting
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். தனியார் பள்ளி, மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவது தமிழக அரசின் கடமை அல்லவா...