7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு தனது பணியாளர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை வரும் சுதந்திர தினத்திற்குள் அறிவித்து அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்து ஒன்னறை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட ஊதியத்தில் அவர்கள் அகவிலைப்படியும் வாங்கிவிட்டார்கள். தற்போது ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான படிகள் (அலவன்ஸ்) மாற்றி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் தமிழக அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என சுமார் 18 லட்சம் பேர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்
தமிழக அரசு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் படி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரருக்கு ஊதிய உயர்வு வழங்குவதால் இவர்களது சராசரி அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம் வரை ஊதியம் உயரும். இதனால் அரசுக்கு மாதம் ரூ.1500 கோடி கூடுதல் செலவாகும்.
இந்த கூடுதல் செலவை, மத்திய அரசிடம் இருந்து பல வகைகளில் தமிழக அரசுக்கு வரும் மானியங்கள் மற்றும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் இவற்றால் அரசு சாமாளிக்க இயலும்.
தமிழ அரசு வரும் சுதந்திர தினத்திற்குள் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரருக்கு மத்திய அரசு வழங்கியது போல் ஜனவரி 2016 முதல் ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.