யோகாவின் முக்கிய கோட்பாடுகள்

நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவை உலகளவில் வளம் பெறச் செய்யத்தக்க, பொருளாதார, ஆன்மிகத் துறைகளில் செழிப்பானதாக மாற்றக்கூடிய பிரதமர், நமக்கு கிடைத்துள்ளது, சிறப்பான விஷயம்.

போற்றத்தக்க கடந்த காலம்; செழிப்பான நிகழ்காலம்; பொன் மயமான வருங்காலம் ஆகிய அனைத்தும், பிரதமர் நரேந்திர மோடியால், நமக்கு ஒருங்கே கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

யோகா, முக்கிய, கோட்பாடுகள்
சர்வதேச யோகா தின திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பின், 177 நாடுகளின் ஆதரவுடன், சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது. இன்று, 200க்கும் மேற்பட்ட நாடுகள், யோகா தினத்தை கொண்டாடுகின்றன.
யோகாவின் பல்வேறு பரிமாணங்களை, சுருக்கமாக இங்கே தருகிறோம்.
* யோகா என்பது, எந்தவொரு மதம், பாரம்பரியம் சம்பந்தப்பட்டது அல்ல; யோகா, அறிவியல் பூர்வமானது; மதச்சார்பற்ற, எல்லாருக்கும் உகந்த வாழ்வியல் முறையாக யோகா திகழ்கிறது
* நோயாளிகளுக்கு, யோகா, முழுமையான மருத்துவ முறையாக உள்ளது. யோகிகளுக்கு, வாழ்க்கையின் முழுமையை அடைவதற்கான சிறப்பான வழிமுறையாக யோகா விளங்குகிறது
* யோகாவால், ஐந்து முக்கிய பயன்கள் கிடைக்கின்றன
* யோகாவால், உடலின் அனைத்து, 'செல்'களும் சமநிலையை அடைகின்றன. அனைத்து ரசாயனம், உப்பு, ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுகிறது. நம் முழு உடலும் நீண்ட கால வாழ்விற்கு ஏற்ப, சமநிலைப்பாட்டை எட்ட, யோகா உதவுகிறது
* மனித அறிவு, சக்தி, திறன் ஆகியவற்றில், 1 முதல் 5 சதவீதம் மட்டுமே விழிப்பு நிலையை
சார்ந்தது. மீதமுள்ள சக்திகள், உறங்கு நிலையில் உள்ளன. உறங்கு நிலையில் இருக்கும் சக்திகள் அனைத்தும், யோகாவால், தட்டி எழுப்பப்படுகின்றன.
* யோகாவால் கிடைக்கும் ஆன்மிக சக்தியால், மனிதனில் இருந்து தெய்வீக நிலையை எட்ட முடியும்
* யோகா, நம்மில் உள்ள அறியாமையை போக்குகிறது
* உடலில் உள்ள நோய்களும், குறைபாடுகளும், யோகாவால்அழிக்கப்படுகின்றன
* யோகியாக திகழ்பவர், ஆன்ம யோகா, பிராணாயாமம், தியானம் ஆகியவற்றை நாள்தோறும் செய்கிறார். ஒரு யோகி, வன்முறையை ஒருபோதும் நினைக்க மாட்டார். பேராசை, நேர்மையின்மை, யோகியின் வாழ்வில் இருக்காது
* உலகின், 700 கோடி மக்களில், 1 சதவீதம் பேர் யோகிகளாக மாறினால் கூட, இந்த உலகம், மிக அற்புதமான, செழிப்பான, அமைதியான வாழ்விடமாக உருவெடுக்கும்
* ஆரோக்கியம், அழகு, சக்தி, அமைதி, செழிப்பு, நித்தியமான மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை, உலகெங்கும் உள்ள மனிதர்களால் விரும்பப்படும் விஷயங்கள்; இவை, யோகாவால் எளிதில் கைவரப்பெறும். ஒரு யோகி, தன் இறப்புக்கு பின், தெய்வீகத்தின் பிரதிநிதியாக வாழ்கிறார்
* சிறப்பு வாய்ந்த தியான, தெய்வீக வாழ்க்கையை வாழும் யோகி, எல்லோர் மீதும் அன்பு காட்டக்கூடியவராக திகழ்கிறார்
* யோகாவால், உற்பத்தித் திறன், கற்பனா சக்தி, எதையும் நேர்மறையாக எதிர்கொள்ளும் திறன், தெய்வீகத் தன்மை அதிகரிக்கிறது
* உலகம் முழுவதும், இறைவனின் படைப்பு என கருதுபவர், யோகி. எல்லாரும் இறைவனின் குழந்தைகள் என்ற எண்ணம் உடையவர், யோகி. ஒப்புயர்வற்ற உயர்ந்த சக்தியாக, கடவுளை, யோகி ஏற்றுக் கொள்கிறார்யோகியின் வாழ்க்கை, அறிவியல் மேலாண்மை கலை
* ஆசனங்கள் உள்ளிட்ட யோகியின் பயிற்சிகளால், உடலும், பிராணாயாமம், தியானம், சமாதி போன்றவற்றால், மனமும் பலம் பெறுகின்றன. ஆன்மா விழிப்படைந்து,
* சுகானுபவம் கிடைக்கிறது
* யோகாவால், மனிதர்களுக்கு உரிய அனைத்து உயர் தன்மைகளும் முழுமையாக உணரப்படுகிறது

* ஆரோக்கியமான உடல், கூர்மையான மனம், உண்மையின் பால் அளவுகடந்த நம்பிக்கை, மனிதத் தன்மை, கருணை உள்ளம் உள்ளிட்ட விஷயங்கள் கிடைக்கின்றன
* இறப்புக்கு பின் உள்ள வாழ்வை, நிகழ் உலகில் வாழக்கூடிய யோகி, அபார செயலாற்றலுடன் கூடியவராக விளங்குகிறார். கடவுளுக்குரிய உயரிய அறிவாற்றல், யோகிக்கு கிடைக்கிறது
* யோகி, எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கிறார். விரும்பத்தகாத உலகில் அவர் எப்போதும் இருப்பதில்லை
* மத விஷயங்களுக்கு அப்பாற்பட்டவர், யோகி; நேர்த்தியான ஆன்மிக வாழ்க்கையை அனுபவிப்பவர், யோகி
* அன்பு, உண்மை, இரக்க வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் யோகி, உலகில் உள்ள அனைவரும் அறியாமையை விட்டொழிக்க வேண்டும் என விரும்புகிறார்
* சுயநலம், அறியாமை உள்ளிட்ட எதிர்மறை விஷயங்களில் இருந்து விடுபட்டவரான யோகி, உலகில், நிலையான அமைதி தவழ வேண்டும் என விரும்புபவர்
* அனைவரும், குறிப்பிட்ட கால அளவே, இவ்வுலகில் வாழ முடியும். இந்த காலத்திற்குள், மிகச் சிறப்பான விஷயங்களை கடைபிடிப்பதில், நாம் உறுதியாக இருக்க வேண்டும். காலை எழுந்தவுடன், யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காலையில், யோகா பயிற்சி செய்பவர்கள், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான முழுமையான சக்தி எளிதில் கிடைக்கிறது.


- பரம் பூஜ்ய சுவாமிஜி மஹராஜ் -