கணினி அறிவியல் பாடத்திற்க்கு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு

748 புதிய கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் கொண்டுவந்தமைக்கும்

 மாண்புமிகு தமிழக முதல்வர் ,மாண்புமிகு பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஐயா" அவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில்
மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம்.
 *6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் கணினி அறிவியல் பாடத்தில் ஓர் புதிய புரட்சி செய்யதிடவும், அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும்  கல்வித்தரத்தை தனியார் பள்ளிக்கு மேலாக உயரத்தவும், அரசுப்பள்ளியில் மாணவர் சேர்ககை உயரவும்,
தமிழகத்தின் கல்வித் தரத்தை மேலை நாட்டுக் கல்வித் தரத்திறக்கு நிகராக கொண்டு செல்ல கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து உருவாக்கிட வேண்டியும்.
மாண்புமிகு கல்வி அமைச்சர் அறிவித்த 41அறிவிப்புகளில் இதுவும் ஒன்று.இதற்க்கான அரசானையை விரைவில் மானிய கோரிக்கையில் வெளியிட வேண்டி
மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வியக்கும் 41 அறிவிப்புகளில் *15/06/2017 அன்றைய கல்விமானிய கோரிக்கையில் .37அறிவிப்பு மட்டும் அறிவித்துள்ளார் கல்வி அமைச்சர்
*மீதம் உள்ள நான்கு அறிவிப்புகளில் கணினி ஆசிரியர்கள்  வாழ்வாதாரத்தை  காக்கும் நீண்ட நாள்   கோரிக்கையான 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கி,அதற்க்கான அரசானையை விரைவில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர்
உருவாக்கி தர வேண்டுகிறோம்..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.