BIOMETRIC ATTENDANCE பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.



சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.