பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார்.



குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த வருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள்.

இந்த கேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.