1950-ம் ஆண்டு முதல் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு திட்டம்

1950-ம் ஆண்டு முதல் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 1950-ம் ஆண்டு முதல் நிலங்கள் ஆவணங்களை (அசையாச் சொத்துக்கள் எதுவாயினும்) விற்பனை, வாங்குதல், திருத்தப்பட்ட அனைத்து வகையான ஆவணங்களையும் (விவசாய, விவசாயம் அல்லாத நிலங்கள் உள்பட) வருமான வரிச்சட்டம் 1961-ன்படி வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து இந்த நிலங்களின் உரிமையாளர்கள் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு செய்துள்ளது. அவ்வாறு இணைக்கப்படாத சொத்துக்களை பினாமி சொத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அரசின் வசம் எடுத்துக் கொள்ளப்படும்.
இதுதொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களை பிரதமரின் அலுவலகத்துக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.