ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா? முதல்வர் அதிரடி

லக்னோ: அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேணடும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரவிட்டுள்ளார்.
யோகியின் அதிரடிகள்
உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகிஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அரசு அலுவலகங்களில் துப்பினால் அபராதம், வருகை நேரம் குறித்து பயோமெட்ரிக் முறை, அதிகாரி மாற்றம், 15 பொது விடுமுறை தினங்கள் ரத்து என அதிரடியான உத்திரவுகளை பிறப்பித்து வருகிறார்.
ஆசிரியர் புகைப்படம்
இன்று (02.05.17) அவரின் அடுத்த அதிரடி, அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும் எனவும், ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ள ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். அப்படி சோதனை செய்யும்போது மாணவர்களிடம் புகைப்படத்தை காட்டி சரியாக வருகிறார்களா என கேட்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கல்வியின் நிலைமை
.பி., முதல்வர் இது குறித்து கூறும்போது: உத்திரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு வராததால் கல்வியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் எடுக்க தங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை அனுப்புவதாக புகார் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கல்வியின் தரத்தை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அரசு நடவடிக்கை

மேலும் அவர் கூறும்போது: அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வரவேண்டும். அதிகாரிகள் மாணவர்களிடம் புகைப்படத்தில் உள்ள ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? என அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும், அப்படி வேலை செய்யாத ஆசிரியர்கள் சம்பளம் வாங்கமுடியாது என தெரிவித்துள்ளார்.