பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் விருதுநகர்; வேலூருக்கு கடைசி இடம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், 97.85 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

84.99 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னை 92.99%த்துடன் 16வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 46,798 பேரில், 40,980 பேர் தேர்ச்சி பெற்று 87.57% தேர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 88.85 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைத்துவந்த நாமக்கல் மாவட்டம் 96.40 சதவீதத்தைப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈதோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.