02.05.2017 மாலை 2.மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணி வரை நீடித்த ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பணியாளர் நலன் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி சார்ந்து கலந்துரையாடல்

 மாண்புமிகு கல்வி அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மற்றும் இயக்குநர் பெருமக்கள் ஆசிரியர்களின் கருத்துக்களை உண்ணிப்பாக கவனித்து அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்கள் சளைக்காமல் பொறுமையாக பதிலளித்தது பாராட்டக்கூடிய செயலாக உள்ளது. இந்த கலந்துரையாடல் 03.05.2017 அதிகாலை 1 மணிக்கு முடிவடைந்தது.மொத்தம் 69 சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடலில்
பங்கேற்றனர்.பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அமைச்சர் அவர்களால் கூறப்பட்ட வாக்குறுதிகள் விவரம்!!

🔶🔷1. தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு கழிவறை வசதி 1ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
🔷🔶2. வகுப்பறை சுத்தம் செய்ய இரு வகுப்பறைகளுக்கு ஒருவர் வீதம் 100 நாட்கள் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள்.
🔶🔷3. 14 இலவசப்பொருட்கள் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் சார்ந்த பள்ளிக்கே அனுப்பி வைக்கப்படும்.
🔷🔶4. சென்னை, திருச்சியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லக்கட்டிடங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். மேலும் கோவை,மதுரை ஆகிய இடங்களில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும்.
🔶🔷5. ஆசிரியர்கள் பிரச்சனைகள் சார்ந்து அனைத்து ஆசிரியர்களும் AEEO தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்காக 5 பள்ளிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர்.
🔶🔷6.மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். தரம் வாய்ந்ததாக இருக்கும்.
🔷🔶7. நீட் தேர்வுக்கு தாயாராகும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் பாடதிட்டம் மாற்றியமைக்கப்படும்.
♦🔹8. பழுதடைந்த கணினிகளை பழுதுபார்த்து கணினி ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
📕📘9. பள்ளிகளில் தினம்தோரும் இறைவழிபாடு நடைபெறும்.
📗📕10. யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
📕📘11. மாணவர் சேர்க்கை குறைபாடை நீக்கி அதிக மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
📘📗12. +1 மாணவர்களுக்கு குறைந்த அளவில் மதிப்பெண் வைத்து தேர்வு நடத்தப்படும்.
📗📕13. பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.

📘📗14. அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள்.