வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பள்ளியிலேயே, போட்டித் தேர்வு முறைகளை தெரிந்து கொள்ள, பயிற்சி வினாத்தாள் மூலம் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, வாரந்தோறும்,
புதிய வினாத்தாள்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் வைக்கப்படுகின்றன. போட்டி தேர்வுகள் போல வினாக்களுக்கு, அப்ஜெக்டிவ் என்ற கொள்குறி வகையில் குறிப்புகள் வழங்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய, மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இத்தேர்வு முறையில், இன்னும் தரமான வினாத்தாள்களை தயாரிக்கவும், மாணவர்கள் புரிந்து, சிந்தித்து, விடைகளை தேர்வு செய்யும் வகையிலும், வினாத்தாள்கள் தயாரிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடந்த பயிற்சியில், மைசூரில் உள்ள, இந்திய மொழிகள்
நிறுவனத்தைச் சேர்ந்த, சாம் மோகன்லால், நடராஜ பிள்ளை, பாலகுமார் உட்பட, பல பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.