பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

'அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது. 

சென்னை மாவட்டத்தில், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, செப்., 7 வரை அனுப்பலாம் என, சென்னை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.