சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பட்டியல் அனுப்ப உத்தரவு

கணினி வழி கல்வி யில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க, ஆசிரியர்கள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களிடம் கணினி வழி கல்வியை ஊக்குவிக்க, மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அனுப்ப, மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், கணினி வழி கற்பித்தலில் திறமையான ஆசிரியர்களின் பெயர் விவரங்களை, தேர்வு செய்து அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, விருதுக்காக மூன்று ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைத்து, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டு மென அறிவுறுத்தப்
பட்டுள்ளனர்.
பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் மீது, புகார்கள், குற்றச்சாட்டு கள், ஒழுங்கு நடவடிக்கைகள் இருக்க கூடாது என்றும், குற்றவியல் நடவடிக்கை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் சிக்காதவர் என்றும் உறுதி யளிக்க, தேர்வுக்குழு தலைவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை, மே, 31ம் தேதிக்குள் மாவட்டங்களிலிருந்து, பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க சி.இ.ஓ.,க்கள்