ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் தனிப்படிவம் நிரப்பித் தந்தால் மட்டுமே மானியம்.

ஆதார் எண் இல்லை என்பதற்கான படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 
       சமையல் கியாஸ்வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்தியஅரசு மானியம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், கடந்த 2013–ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


இதற்கு ஆதார்எண் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.ஆனால் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இதைதொடர்ந்து வங்கிக்கணக்கு எண் மட்டும் கொடுத்த வாடிக்கையாளர்களுக்கும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.இந்தநிலையில், கடந்த 1–ந் தேதி முதல் ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் கியாஸ் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.அதாவது, அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஏற்பது இல்லைஅரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையிலும்,சமையல் கியாஸ் நிறுவனங்கள் ஆதார் எண் சமர்ப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்வதை திடீரென்று நிறுத்தியுள்ளன. மதுரை மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 947 சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 117 பேரும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதில் ஆதார் எண்கொடுக்காத வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிவு செய்தால் அதை ஏற்பது இல்லை.

 இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–ஆதார் எண் கொடுத்த வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைப்பதில் எந்த பிரச்சினையும் இருப்பதில்லை. வங்கிக்கணக்கு மட்டும் கொடுத்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோருக்கு கணக்கு எண், பெயர், பண பரிவர்த்தனைக்கான கோடு ஆகியவற்றில் குளறுபடி ஏற்படுகிறது.மதுரை மாவட்டத்தில் 87 சதவீத வீட்டு உபயோக சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் பதிவு செய்துள்ளனர். ஆதார் எண் கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் வினியோகம் செய்ய முடியாது என்று கியாஸ்ஏஜென்சிகள் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக ஆதார் எண் பெறவில்லை என்பதற்கு ஒரு தனிப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அவர்களுக்கும் வழக்கமான மானியத்துடன் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும்.இதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.