தமிழகம், கேரளா, புதுச்சேரி
சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்
என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய
நஜீம் ஜைதி, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே
கட்டமாக மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.
தேர்தல் குறித்த அறிவிப்பில்,
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி துவங்குகிறது.
வேட் மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் ஏப்ரல் 30ம் தேதி பரிசீலிக்கப்படும்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற மே 2ம் தேதி கடைசி நாள்.
மூன்று சட்டப்பேரவைக்கும் மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19ம் தேதி எண்ணப்படும் என்று அறிவித்தார்.