அனைத்து வகையான வங்கி
கணக்கு தொடங்குவதற்கும்
'பான்' எண்
கட்டாயமாக்கப்படுகிறது என மத்திய
நிதி அமைச்சர்
அருண்ஜெட்லி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற துணை
மானிய கோரிக்கை
மீதான விவாதத்துக்கு
அவர் பதிலளித்து
பேசுகையில், ''உணவு கட்டணம், வெளிநாட்டு பயண
டிக்கெட் போன்றவற்றுக்கு
ரூ.50 ஆயிரத்துக்கு
மேல் ரொக்கமாக
செலவழித்தால் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து வகையான
வங்கி கணக்கு
தொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக
எந்த பொருளை
வாங்கினாலும், விற்றாலும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படும்.
இதற்கான அறிவிக்கையை
மத்திய அரசு
விரைவில் வெளியிடும்.
உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்த
இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.
இதனிடையே, ஜன் தன்
திட்டத்தின் கீழ் துவங்கும் வங்கிக் கணக்குகளுக்கு
மட்டும் பான்
எண் கட்டாயமில்லை
என வருவாய்த்துறை
செயலாளர் கூறியுள்ளார்.