வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
 
           இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ), வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.


இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இவ்வாறு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.