அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை

அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
விதிமுறை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பெரம்பலுாரில் சமீபத்தி
ல் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர். முறையாக பராமரிக்காமல் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்வதுதான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே விதிமுறை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை கண்காணித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர்கூறுகையில்,“ வாகனங்களை முறையாக பராமரித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் அது மீறப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. பெரம்பலுார் சம்பவத்திற்குப்பின் துறை உயரதிகாரிகள் உத்தரவுப்படி அதுபோன்ற வாகனங்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க காலை,மாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,”என்றார்.