எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் கிடைக்கும்.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
சென்னையில், ஒரு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் மீதமுள்ளன.இதுதவிர, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதிக்கு ஏற்ற வகையில், சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 600 இடங்கள் வரை கிடைக்கலாம்.இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், கவுன்சிலிங் மூலம் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம், இன்று துவங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.விண்ணப்பங்கள், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும், ஜூன், 28ம் தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம், 500 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கட்டணம் இல்லை.விண்ணப்பிப்போர், விண்ணப்பித்த நாள் முதல், இறுதி கலந்தாய்வு நடக்கும் வரை, அதுபற்றிய விவரங்களை, tண.டஞுச்டூtட.ணிணூஞ், தீதீதீ.tண.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


எந்தெந்த இடங்களில் கிடைக்கும்

சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, நெல்லை, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்
விண்ணப்பங்கள் கிடைக்கும்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், விண்ணப்பங்கள் கிடைக்காது; மாணவர், பெற்றோர் அலைய வேண்டாம்.