மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்
தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வுக்கு 383 பேர் அழைக்கப்பட்டிருக் கிறார்கள். ஏற்கெனவே, குருப்-2 பணிகளில் 1,130 காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப் பும், இதேபோல், தோட்டக்கலை அலுவலர் பணியில் 183 காலி யிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 3 விதமான பணி களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெற்றதால் டிஎன்பிஎஸ்சி அலுவலகத் தில் நேற்று கூட்டம் அலைமோதியது. குரூப்-2 சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் 8-ம் தேதி வரையிலும், தோட்டக்கலை அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய் வரையும் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை பார்வையிட்ட பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர் களிடம் கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும். துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களும், அதேபோல், நக ராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழி லாளர் ஆய்வாளர், வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2 தேர்வுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களும் வரப்பெற்றுள்ளன. எனவே, புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.