மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கோடை விடுமுறை

மதுரை: மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறையாகும்.

மே 6, 7, 13, 14, 20, 21, 27, 28 ல் விடுமுறைக்கால நீதிமன்றம் செயல்படும். இந்நாட்களில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, டி.எஸ்.சிவஞானம், ஜி.சொக்கலிங்கம், டி.ராஜா, வி.எஸ்.ரவி, ஆர்.மாலா, வி.எம்.வேலுமணி விசாரிப்பர். அவசர கால மனுக்களை மே 4, 5, 11, 12, 18, 19, 25, 26 ல் தாக்கல் செய்யலாம் என பதிவாளர்(நிர்வாகம்) ஜோதிராமன் தெரிவித்தார்.