இபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

இபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது: 


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் ரூ.ஆயிரம் என்ற புதிய திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தால் சுமார் 32 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து மேற்கொண்டு தொடர்வது குறித்து அரசிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. ஆகையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.என தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி அரசு வெளியி்ட்டுள்ள அறி்க்கை ஒன்றில் குறைந்த பட்ச ஓய்வூதிய திட்டம் செப்.,1-ம் தேதி முதல் மார்ச் 2015 வரை மட்டுமே கிடைக்கும் என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஒய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தபட்ட போதிலும் வழக்கமான ஒய்வூதிய பலன் கிடைப்பதில் எவ்வித சிரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.