தொடக்கப்பள்ளிகளுக்கு இணையதள வசதி

உலகிலேயே மிக அதிக அளவாக சீனாவில் சுமார் 65 கோடி பேர் இணையதளம் பயன்படுத்துவதாக கடந்த ஆண்டு இறுதியில் கணக்கிடப்பட்டது. எனவே 2015-ம் ஆண்டில் கல்வியை டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன்படி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இ
ணையதள வசதியை ஏற்படுத்த கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின்படி அனைத்து தொடக்கப்பள்ளிகளும் குறைந்தது ஒரு கம்ப்யூட்டராவது வைத்திருக்க வேண்டும்.
இதற்காக தொலைதூரம் மற்றும் ஊர்ப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு உதவுமாறு மாகாண அரசுகளை கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டு வருகிறது. மேலும் மல்டி-மீடியா வகுப்பறைகளுக்கான நிதியுதவிக்கு ஆலோசனைகளையும் அரசு வழங்கி உள்ளது.
இதற்கிடையே கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அங்கன்வாடி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 26 லட்சம் பேருக்கும், 50 ஆயிரம் பள்ளி முதல்வர்களுக்கும் தகவல் தொடர்பு குறித்த பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது