கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை

மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்புக்கான சேர்க்கைக்கு முதல் நாளிலேயே 1366 விண்ணப்பங்களை பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மதுரை நரிமேடு மற்
றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு இடங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் 2015 ஆம் ஆண்டுக்காண முதல் வகுப்பு சேர்க்கைக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
மதுரை நரிமேடு பள்ளியில் முதல்வகுப்பில் 160 இடங்களுக்கும், திருப்பரங்குன்றத்தில் 120 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்காக பள்ளிகளில் பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். முதல் நாளிலேயே நரிமேடு பள்ளியில் 1008, திருப்பரங்குன்றம் பள்ளியில் 358 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பிப்.10 இல் தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 10 மாலை 5 மணிக்குள் அந்தந்த பள்ளிகளில் தரவேண்டும்.
இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 25 சதவிகிதம் ஒதுக்கீடு உள்ளது. அவை மார்ச் 14 ஆம் தேதி ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். மற்ற இடங்களுக்கு தேர்வாகும் மாணவர்கள் விபரம் மார்ச் 18 ஆம் தேதி அறிவிப்பு செய்யப்படும். ஏப்.1 ஆம் தேதி முதல் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.