நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை கிடைக்குமா?- பட்ஜெட் முன்னோட்டம்

டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி யடைந்ததை அடுத்து நடுத்தர மக்களின் ஆதரவை பெறுவதற்காக இந்த தேர்தலில் வரிச்சலுகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தலாம் அல்லது வரிவிலக்குக்கான முதலீடு செய்யப்படும் தொகை அளவினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
தனிநபர்களுக்கு மட்டுமல் லாமல் நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி துறையை ஊக்குவிப்ப தற்காகவும், வேலை வாய்ப்பினை உருவாக்கவும் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இப்போது இந்த தொகையை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர் பார்ப்பதாக அசோசேம் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மூன்று லட்ச ரூபாய் வரைக்கும் வரி செலுத்த தேவை இல்லை என்பதால் மக்கள் கையில் அதிக பணம் இருக்கும், இதனால் மக்களின் வாங்கும் சக்தி உயரும் என்று அசோசேம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சர்வேயில் கலந்துகொண்ட 78 சதவீத மக்கள் வீட்டுக்கடனுக்கு செலுத் தும் தொகையில் கூடுதல் வரி விலக்கு வேண்டும் என்று கேட்டிருக் கிறார்கள்.
இப்போது ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் வட்டி செலுத்து வதன் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம். இந்த தொகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பெரும்பாலானவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
80 சி பிரிவு சலுகை உயருமா?
நாட்டின் சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது, இப்போது ஜிடிபியில் 30 சதவீத அளவுதான் சேமிப்பு விகிதம் இருக்கிறது. முதலீட்டுக்கு வரிச்சலுகை கொடுக்கும் பட்சத்தில் இந்த விகிதம் உயரும் என்று அசோசேம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் தெரிவித்தார்.
தற்போது 80 சி பிரிவின் கீழ் முதலீடு செய்யப்படும் 1.5 லட்ச ரூபாய்க்கு வரி விலக்கு உண்டு. கடந்த பட்ஜெட்டில் இந்த தொகை அளவினை ஒரு லட்சம் முதல் 1.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போது இந்த தொகையில் இருந்து ரூ.20,000 முதல் ரூ.50,000 உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரி சுனில் சுப்ரமணியம், 80 சி கீழான வரம்பு ரூ.50,000 வரை உயரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் கட்டுமானத்துறையை ஊக்குவிக்க இன்பிரா பாண்டுகள் மீண்டும் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனும் முதலீட்டுக்கு கொடுக்கப்படும் வரிச்சலுகையை உயர்த்த வேண்டும் என்று இம்மாத ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.