ஆசிரியர் கூட்டணி தேர்தல்மாநில நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர்:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் தேர்தல், திருப்பூரில் நேற்று நடந்தது.


திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்த, 11வது மாநில தேர்தலில், பொதுக்குழு உறுப்பினர்கள் 160 பேர் பங்கேற்றனர்.புதிய மாநில தலைவராக மோசஸ், பொது செயலாள ராக பாலச்சந்தர், பொருளாளராக ஜீவானந்தம், இந்திய பள்ளிகளின் கூட்டமைப்பு உறுப்பினராக சரவணன், துணை பொது செயலாளராக மயில், துணை செயலாளர்களாக மலர்விழி, மணிமேகலை, சித்ரா, மல்லிகா, கோகிலாம்பாள், தமிழ்செல்வி உள்ளிட்ட 19 பொறுப்பாளர்கள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

மாநில துணை செயலாளர் மற்றும் பள்ளிகளின் கூட்டமைப்பு உறுப்பினர் பொறுப்புகளை தவிர்த்து, மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் மாநில நிர்வாகிகள், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையராக முன்னாள் மாநில தலைவர் முரளிதரன், துணை ஆணையராக முன்னாள் துணைத் தலைவர் குருசாமி ஆகியோர் செயல்பட்டனர். புதிய நிர்வாகிகள், வரும் 2018 வரை, பொறுப்புகளில் நீடிப்பர்.