அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது கிரிமினல் வழக்கு பாய்கிறது

மைசூரு:“மைசூருவில், அங்கீகாரம் இல்லாத, 36 பள்ளிகள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்,” என, கல்வித் துறை துணை இயக்குனர், பசப்பா தெரிவித்தார்.



மைசூருவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மைசூரு நகரின் தெற்கு, வடக்கு பிரிவிலுள்ள, டிங்கீஸ் உயர்நிலைப் பள்ளி, எஸ்.கே.கே.பி., உயர்நிலைப் பள்ளி, சாரதா தேவி நகர், சாரதா உயர்நிலைப் பள்ளி உட்பட, 36 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.மைசூரு நகர் முழுவதும் உள்ள, மற்ற, 81 பள்ளிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. இந்த பள்ளிகளின் நிர்வாகிகள், 15 நாட்களுக்குள், அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால், அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு, அனுமதி வழங்கப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.