ஜெர்மன் மொழி தொடரும்: மத்திய அரசு அடித்தது பல்டி

புதுடில்லி: 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக ஜெர்மன் தொடரும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த,
அயல்நாட்டு மொழியான ஜெர்மன் மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படும் என, கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'மூன்றாம் மொழிப்பாடமாக, ஜெர்மன் தொடரும். அதை, கூடுதல் மொழிப்பாடமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் மாணவர்கள் படிக்கலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. அந்த மொழியை கற்றுக் கொடுப்பதற்காக, ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களும் பணியில் தொடர்வர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது