புவியியலாளர் பணி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு, உதவி புவியியலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்திக் குறிப்பு:புவியியலில், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.tnpscexams.net என்ற முகவரியில், இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இப்பதவிக்கான கம்ப்யூட்டர் வழித்தேர்வு, 2015 பிப்., 1ம் தேதி, சென்னை மையத்தில், முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்கும். இத்தேர்விற்கு, டிச.,17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.