இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் - தினத்தந்தி

இடைநிலைபட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுஇருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பணி நியமனத்துக்கு தடை ,இடைநிலைபட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை
ரத்து செய்ய வேண்டும் என்றும்தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதிபட்டதாரிஇடைநிலை ஆசிரியர் பணிநியமனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
அப்பீல் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறைசெயலாளர்மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார்இந்தஅப்பீல் மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன்ஆர்.மகாதேவன்ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததுதமிழக அரசு சார்பில்ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜிமதுரை ஐகோர்ட்டு கிளைசிறப்பு அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் கூறியதாவது:-
ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணைகணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என்றுகூறி பட்டதாரிஇடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனிநீதிபதி தடை விதித்தார்ஆசிரியர் பணிக்கு ‘வெயிட்டேஜ்மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறைசரியானது தான் என்று சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சுஉத்தரவிட்டுள்ளதுஇதுபோன்ற சூழ்நிலையில் ஆசிரியர் பணிநியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்துள்ள தடை ஏற்புடையது அல்ல.எனவேஅந்த தடையை நீக்க வேண்டும்.’
இவ்வாறு அரசு வக்கீல்கள் கூறினர்.
தடை நீக்கம்
மேலும்சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த உத்தரவுநகலையும் அவர்கள் நீதிபதிகளிடம் கொடுத்தனர்இதைத்தொடர்ந்து,பட்டதாரிஇடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தனி நீதிபதிவிதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்வெயிட்டேஜ் மதிப்பெண்அடிப்படையில் இடைநிலைபட்டதாரி ஆசிரியர் பணிக்குகவுன்சிலிங்’ நடத்தப்பட்டு பலருக்கு பணி நியமன உத்தரவுவழங்கப்பட்டதுஅந்த சமயத்தில் பணி நியமனத்துக்கு ஐகோர்ட்டுஇடைக்கால தடை விதித்ததால் ‘கவுன்சிலிங்’ மூலம் பணி நியமனஉத்தரவு பெற்றவர்கள் பணியில் சேர முடியாமல் இருந்தனர்தற்போதுஅந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்துஎடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.