பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!

  மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

       இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
 
         இத்திட்டத்தின் வெற்றிக்கு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஆகிய அனைவரின் பங்களிப்பும் கோரப்பட்டது.

தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் மனநிலையை, மாணவர்களிடம், இத்திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் மூலம், அதிகமான பசுமை சூழலைக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

பள்ளிகள், green ranking meter மூலம் மதிப்பிடப்படும் மற்றும் இதனால், அவை தங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெறும்.

அக்டோபர் 31ம் தேதி வரை தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருக்கும் இத்திட்ட நடைமுறையின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையே, திருப்தியான வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்ற உண்மை, மாணவர்களுக்கு உணர வைக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம், கழிப்பறை வசதியில்லாத பள்ளிகள் என்ற அவலத்தை நீக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.