1,400 இளநிலை உதவியாளர்கள் 25, 26ம் தேதி பணி நியமனம்.

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்களில், 1,395 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நிகழ்ச்சி, ஆன்-லைன் வழியில், வரும், 25ம் தேதி மற்றும் 26ம் தேதி நடக்கிறது.தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் முகவரி அடங்கிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, நேரில் செல்ல வேண்டும். ஒரு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு, 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டங்களில், பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும், 26ம் தேதி, காலை, 9:00 மணிக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.